வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | துல்கர் 40 : எஸ்.ஜே சூர்யா வெளியே... மிஷ்கின் உள்ளே... | எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ் | பிளாஷ்பேக் : ஹிட்லராக நடித்த சிவாஜி | பிளாஷ்பேக்: குறைந்த படங்களில் மட்டும் நடித்த புஷ்பவல்லி |
தமிழ்த் திரையுலகத்தின் நீண்ட நாளைய காதல் ஜோடிகளான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் சென்ற வெளிநாட்டு சுற்றுப் பயண புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போடும் வழக்கத்தை உடைய விக்னேஷ் சிவன் முதல் முறையாக மருமகனாக தனது மாமியாருக்கு, அதாவது நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அன்புள்ள ஓமனா குரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எனது மற்றொரு அம்மா. நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண், எப்போதும் அழகான இதயத்துடன் தூய்மையான ஆன்மாவைப் பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுடன் இருக்க வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன்,” என வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.