இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் இந்த மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான பிரமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடிகை த்ரிஷா, படத்தில் தன்னுடைய கதாபாத்திரமான 'குந்தவை' என பெயரை மாற்றியுள்ளார். அது போல நடிகர் விக்ரம், அவரது கதாபாத்திரமான 'ஆதித்த கரிகாலன்' எனப் பெயரை மாற்றியுள்ளார்.
மேலும், நேற்று விக்ரம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண் மொழியையும் இழுத்து வா!” எனப் பதிவிட்டு கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோரை டேக் செய்திருந்தார்.
த்ரிஷா அந்தப் பதிவை ரிடுவீட் மட்டும் செய்திருந்தார். விக்ரம் பதிவிற்குப் பதிலளிக்கும் விதத்தில் கார்த்தி, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் இலங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me,” என பதிலளத்திருந்தார். இவர்களது சுவாரசியமான பதிவிற்கும், பதிலுக்கும் ரசிகர்கள் விதவிதமான கமெண்ட்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.
ஆதித்த கரிகாலன் தம்பியான அருள்மொழி வர்மனிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.