அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி அடுத்தப்படியாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. தற்போது மகேஷ்பாபு இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகே இந்த படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் டொரண்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலி பங்கேற்றுள்ளார். அப்போது தனது அடுத்தப்படம் பற்றி அவர் பேசும்போது, ‛‛மகேஷ்பாபு உடன் எனது அடுத்தபடம் உருவாகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான படங்கள் பாணியில் ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த இந்திய படமாக இருக்கும்'' என்றார்.
இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.