‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, உருவாகும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் வருகின்ற 30ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டருடன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகியோரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் இடம்பெற்றுள்ளது. இது பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் ஒரு பகுதிதான் என்றாலும் இது எந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பது பின்னர் தான் தெரியவரும்.