விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான மற்றொரு அணியினரும் களமிறங்கினர். இதில் வெற்றி பெற்றவர்கள் முழு விபரம் இதோ....
தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். செயலாளராக பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத்தலைவர்களாக எஸ்ஏசியின் ரவி மரியாவும், பாக்யராஜ் அணியின் யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்ஏசியின் சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்ஏசி அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியின் பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.