'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
10 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தனுஷ் நண்பராக நடித்திருந்தார். பள்ளி பருவ காதலை சொன்ன இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. அது விமர்சனத்தையும் சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடலும் உலகம் முழுக்க ஹிட்டாகி சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மீண்டும் ஆந்திராவில் தெலுங்கு பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். திரையிட்ட தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புதுப்படத்திற்கு நிகராக படம் ஒடுவதை பார்த்து ஆந்திராவே வாயடைத்து நிற்கிறதாம்.
பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு என்.டி.பாலகிருஷ்ணாவோடு ஒரு படத்திலும், சிரஞ்சீவியோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு 3 படம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேப்போல் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். அதையொட்டியும் இந்த படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
3 படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.