Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் | விஜய் படத்தை நிராகரித்த நடிகர் | 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - 'ஆப்' செய்யப்பட்ட டிரைலர் கமெண்ட்டுகள் | சமந்தா போல் அரிய வகை நோயால் அவதிப்படும் பூனம் கவுர் | நடிகை மலாய்க்கா அரோரா கர்ப்பமா? - அர்ஜூன் கபூர் காட்டம் | விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தின் புதிய அப்டேட் | 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட சர்ச்சை பேச்சு : இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம் | திருமணத்தால் வந்த கோபம் : ராஜ்கிரண் மீது குற்றம் சாட்டும் வளர்ப்பு மகள் | மனைவியுடன் மீனாட்சி அம்மனை தரிசித்த விஷ்ணு விஷால் | கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை : சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடை விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

08 செப், 2022 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Dress-code-:-Rashmika-Mandana-in-controversy

பாலிவுட் என்றாலே கிளாமருக்கும், கவர்ச்சிக்கும் குறையிருக்காது. எங்கு வெளியில் சென்றாலும் பாலிவுட் நடிகைகளின் பின்னால் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்கள் செல்வார்கள். நடிகைகளிடம் விதவிதமாக போஸ் கொடுக்கச் சொல்லி புகைப்படங்களை எடுப்பார்கள். அந்த புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அதே சமயம் எந்த இடத்தில் எந்த ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதில் பாலிவுட் ரசிகர்கள் சரியாக விமர்சனம் வைப்பார்கள். ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகும் 'குட்பை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவுக்காக 'லெஹங்கா' ஆடை ஒன்றை அணிந்து சென்றார் ராஷ்மிகா. மேலாடை பகுதியில் பிகினி போன்ற வடிவமைப்பில் ஆடையும், அதற்கு மேல் மூடப்படாத கோட் ஒன்றையும் அணிந்திருந்தார். மிகவும் கிளாமராக இருந்த அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அதே சமயம் அதே ஆடையுடன் மேலாடை பக்கம் 'கோட்' ஐ மூடிய படி மும்பையின் பிரபலமான 'லால்பகுச்சா ராஜா' விநாயகர் சிலையை வழிபடச் சென்றிருந்தார். கடவுளை வழிபட அப்படி ஒரு ஆடையில் அவர் செல்லலாமா என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விநாயகர் சிலை முன்பு நின்று கொண்டு அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது தவறு என்றும் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் ராஷ்மிகா சென்றதால் பாலியல் தொந்தரவு நடக்கவும் வாய்ப்புகள் உண்டு என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
‛இசைக்குயில்' பீ.சுசீலா தலைமையில் சென்னையில் ‛சுபம்' இசைக்குழுவின் மெல்லிசை நிகழ்ச்சி‛இசைக்குயில்' பீ.சுசீலா தலைமையில் ... 'லைகர்' வதந்திகள் : மீண்டும் வந்து கோபப்பட்ட சார்மி 'லைகர்' வதந்திகள் : மீண்டும் வந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ajay -  ( Posted via: Dinamalar Android App )
10 செப், 2022 - 10:18 Report Abuse
ajay what to do? Naalu kaasu paakanum na ipdi poga vendi iruku. Romba decent ah pona makkal maranthuruvangale. Engaluku fund venu
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
09 செப், 2022 - 09:50 Report Abuse
Bala Murugan திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பற்றியும் திரைப்படத்துறை சார்ந்த எந்த செய்திகளும் செய்தித்தாளில் வர வேண்டாம். முக்கியமாக நடிகைகள் பற்றிய செய்திகள் வேண்டவே வேண்டாம். எல்லா செய்திகளும் பார்க்கும்படியும் வாசிக்கும்படியும் இல்லை, மிகவும் கேவலமாக இருக்கிறது, தயவுசெய்து நான் எல்லோருடைய கால்களிலும் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
12 செப், 2022 - 17:11Report Abuse
Yokiyanஉங்களுக்கு வாசிக்கும்படி இல்லையென்றால் வாசிக்காதிங்க....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in