போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கில் சில பல படங்களில் நடித்து பின்னர் தயாரிப்பாளராக மாறியவர் சார்மி கவுர். தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனரான பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அவர்களது சமீபத்திய தயாரிப்பான 'லைகர்' படம் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களை விட்டு தற்காலிகமாக விலகுவதாக பதிவிட்டிருந்தார். மீண்டும் தங்களது தயாரிப்பு நிறுவனம் மீண்டு வரும் அன்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 'லைகர்' தோல்விக்கு பல கோடிகளைத் தருகிறார்கள் என்றும், அவர்களது அடுத்த படமான 'ஜனகனமண' தயாரிப்பிலிருந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் விலகியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து இன்று மீண்டும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வந்து, “வதந்திகள், வதந்திகள், வதந்திகள், அனைத்து வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாகச் சொல்லியபின் வெளிவந்த வதந்திகளுக்கு பதிலளிக்க சார்மி மீண்டும் வந்துள்ளார். அடுத்தடுத்து இப்படி பல செய்திகள் வந்தால் ஒவ்வொரு முறையும் வந்து பதிவிட்டு செல்வாரோ ?.