ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இசை அரசி, இசைக்குயில்... என இன்னும் என்னனென்ன பட்டங்கள் கொடுக்க முடியுமோ அவை அனைத்திற்கும் பொருத்தமானவர் பாடகி பி.சுசீலா. பல்லாயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.தட்சணாமூர்த்தி ஆடிடோரியத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜி.ஆர்.கண்ணன் வழங்கும் "சுபம்" இசைகுழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. 54 ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் கண்ணனுக்கு பாராட்டு விழா இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பி.சுசீலா தலைமை ஏற்கிறார்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் டி.எம்.எஸ் அவர்களின் மகன் பால்ராஜ், கோவை முரளி, டி.எல்.சங்கர்ராஜா, கே.வெங்கடேஷ், ஜி.கே.பார்த்திபன், ஜெய்ஸ்ரீ, உஷாராஜ், கல்யாணி கவுரி சங்கர், இசையமைப்பாளர் தீனா, மதன்பாப், ராஜேஷ் மயில்சாமி, அமிர்தா, ஜனனீ(மதன்பாப்) ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இருக்கையில் அமர முன்கூட்டியே வர வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.