இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை என்ற படத்தில் நடித்தவர் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான இவரும், நடிகரும், பைக் ரேஸருமான அஜித் குமாரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அலிசா அப்துல்லா தனது சோசியல் மீடியாவில் கூறுகையில், பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாக பாஜகவில் இணைந்துள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் அலிசா அப்துல்லா. இதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.