சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

50 வயதுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கும் குஷ்பு, பாஜகவின் நிர்வாகியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு, என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன் என்ற ஒரு பதிவு போட்டிருந்தார். பலரும் வாழ்த்தினர், சிலர் கடுமையாக விமர்சித்தனர். இதனால் டென்ஷன் ஆகிவிட்டார் குஷ்பு. அதையடுத்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், ‛‛என்னை சுற்றி பல பொறாமை பிடித்தவர்களை நான் பார்க்கிறேன். லண்டனில் புதிய வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் அது சொந்த வீடு என்று ஆகிவிடுமா? முட்டாள்களே, நீங்கள் வாடகை வீடு என்று ஒன்று இருப்பதை பற்றி கேள்விப்பட்டதில்லையா? ஒரு பெண் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்தால் ஏன் பலருக்கு வலிக்கிறது என்பது புரியவில்லை'' என்று பதிவிட்டுள்ளார் குஷ்பூ.