ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் |
ஐதராபாத்: நடிகையும், பா.ஜ., நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு காய்ச்சல், உடல் வலி காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛கடுமையான காய்ச்சல், உடல் வலி போன்றவற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் உடல் உங்களிடம் ஏதாவது சொன்னால் தயவுசெய்து அதை நிராகரிக்காதீர்கள். நான் விரைந்து குணமாகிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது' எனத் தெரிவித்துள்ளளார்.