ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் “நம் அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை குஷ்பு தன் அண்ணன் அப்துல்லா நடித்துள்ள 'ஒன் வே' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, வெற்றிமாறன் பேச்சு குறித்து கேட்டபோது அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இயக்குநர் வெற்றி மாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வரலாறு பற்றி ஆய்வு செய்யாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்க மாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாறை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை. என்றார்.