டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
சில தினங்களுக்கு முன்பு லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டார்கள். இது அவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதேபோல் ரவீந்திரன் சந்திரசேகரன் மனைவியை பிரித்து வாழ்ந்து வந்தார். இப்படியான நிலையில் ரவீந்திரன், மகாலட்சுமி இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்.
இந்த நேரத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை, நடிகை வனிதா விஜயகுமார் மறைமுகமாக தாக்கி இருக்கிறார். பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்ட போது அதனை கடுமையாக விமர்சித்தார் ரவீந்திரன் சந்திரசேகர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே இணையத்தில் நேரலையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது வனிதா பதிவிட்டுள்ளதாவது : ‛‛மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிசியாகவும் இருக்கிறேன். கர்மாவுக்கு திருப்பி கொடுக்க தெரியும். நான் முழுமையாக நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்திரனை தான் மறைமுகமாக தாக்கி இருக்கிறார் வனிதா என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.