வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு |

சினிமாவில் கதாநாயகிகள் கிளாமர் காட்டினால்தான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற முடியும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், துளி கூட கிளாமர் காட்டாத கதாநாயகிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்கள் என்பது வரலாறு. சமீப காலங்களில் ஓரளவுக்காவது கிளாமர் காட்ட வேண்டும் என்று சில முன்னணி நடிகைகளும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.
கிளாமரான புகைப்படங்களைப் பகிரும் நடிகைகளுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்கின்றன. அதை வைத்தே ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. தற்போதைய நடிகைகளில் அதிகம் கிளாமர் காட்டாத ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அவர் பகிர்ந்த போட்டோஷுட் புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமராகவே இருக்கிறது. நீள கவுன் ஒன்றின் இரண்டு பக்கங்களிலும் டிரான்ஸ்பரன்ட்டான இடைவெளி தோலின் நிறத்திலேயே உள்ளது. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து அதுவே கிளாமர்தான் என ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக் செய்துள்ளார்கள்.