ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்' என கடந்த 15 வருடங்களில் ஐந்தே ஐந்து படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான வாழ்வியலை, பதிவைச் சொன்ன படங்கள். அதனாலேயே அவருக்கு சினிமாவைக் காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.
இன்று வெற்றிமாறன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி அவருடைய வாழ்த்தில், “மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் மாபெரும் படைப்பாளி, அறம் போற்றும் விவசாயி, கடும் உழைப்பாளி அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி, படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளுடன், படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.