Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லைகர்' படுதோல்வி : சமூக வலைத்தளங்களை விட்டு தற்காலிகமாக விலகும் சார்மி கவுர்

04 செப், 2022 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Liger-flop-:-Charmi-quits-social-media

2022ம் ஆண்டில் ஒரு படக்குழுவினரால் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தி சொல்லப்பட்ட படங்களில் ஒன்று 'லைகர்'. தெலுங்கின் ஹாட் ஹீரோ விஜய் தேவரகொண்டா, பாலிவுட்டின் ஹாட் கதாநாயகி அனன்யா பாண்டே, கரண் ஜோஹர் இணைந்த தயாரிப்பு, முன்னாள் உலகக் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் சிறப்புத் தோற்றம் என என்னென்னமோ சொன்னார்கள்.

ஆனால், படம் வெளிவந்த பின் “இதற்காகவா இவ்வளவு பில்டப் கொடுத்தீர்கள்” என விமர்சகர்களும், ரசிகர்களும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். படத்தில் கதையம்சம் என்ற ஒன்றுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என இந்தப் படமும் திரையுலகினருக்கு உணர்த்தியது.

தினமும் அந்தப் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள், மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் படக்குழுவினருக்கு தனி மனதைரியம் வேண்டும். அதனாலோ என்னவோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நடிகையான சார்மி கவுர் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார்.

அவற்றில் மிகவும் ஆக்டிவ்வாகவே இருந்த சார்மி அவரது பதிவில், “சில் கைஸ், சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன். பூரி ஜெகன்னாத் மீண்டு வருவார், பெரிதாக, சிறப்பாக…அது வரை... வாழு வாழ விடு,” என விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொல்லும் 'விடுதலை' குழுவெற்றிமாறனுக்கு வாழ்த்து சொல்லும் ... பொய் சொன்ன மீனா ; வருத்தப்பட்ட கலா மாஸ்டர் : அப்புறம் நிகழ்ந்த ‛சர்ப்ரைஸ்' பொய் சொன்ன மீனா ; வருத்தப்பட்ட கலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in