'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் படங்களில பிஸியாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். மீள முடியாத இந்த துயர சம்பவத்திலிருந்து மீனா இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். வித்யாசாகர் மறைந்த சமயத்தில் இருந்து இப்போது வரை மீனாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார் நடன இயக்குனர் கலா.
இந்நிலையில் கலா மாஸ்டர் தனது 18வது திருமணநாளை கொண்டாடினார். இதற்கு வரும்படி மீனாவை அழைத்துள்ளார். ஆனால் மீனாவோ தான் ஊரில் இல்லை என கூறிவிட்டார். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த கலாவிற்கு சர்ப்ரைஸாக மீனா என்ட்ரி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுபற்றி கலா கூறுகையில், ‛‛மீனா ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னார். எங்களுடைய இந்த சிறப்பு நாளில் அவர் என்னுடன் இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால் திடீரென்று வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா'' என கூறியுள்ளார்.
அதோடு மீனாவை பார்த்த இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கிய போட்டோக்களையும், தனது திருமணநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் கலா பகிர்ந்துள்ளார்.