மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' |
செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள 'நானே வருவேன்' படத்தின் வெளியீடு பற்றிய அப்டேட் எப்போது வரும் என அவர்களின் ரசிகர்கள் காத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில், யுவனின் பிறந்த நாளை முன்னிட்டும் அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. அதில் 'விரைவில் அப்டேட்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி என்பதால் பாடல்கள், டீசர், டிரைலர், பட வெளியீடு என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும், தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'திருச்சிற்றம்பலம்' படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் இந்தப் படத்தின் வெற்றியையும் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே இப்படம் பற்றிய டிரெண்டிங் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.
இம்மாதக் கடைசியில் செப்டம்பர் 30ம் தேதியன்று 'பொன்னியின் செல்வன்' படத்துடன் இப்படம் போட்டியாக வெளியாகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.