''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
''கேப்டன்' திரைப்படம், ஹாலிவுட் படம் போல் இருக்கும்'' என, நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
'டெடி', 'சார்பட்டா பரம்பரை' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படம், வரும் 8ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்ய லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நடிகர் ஆர்யா சென்று, கேப்டன் திரைப்படத்தின் டிரைலரை, ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகிறார்.நேற்று கோவையில் உள்ள தியேட்டரில் கேப்டன் படத்தின் டிரைலரை, நடிகர் ஆர்யா ரசிகர்களுடன் பார்த்து, ரசிகர்களுடன் 'செல்பி' எடுத்து உற்சாகப்படுத்தினார்.
பின் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், ''ராஜா ராணி திரைப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும், 8ம் தேதி வெளியாக உள்ள, 'கேப்டன்' திரைப்படம் 'ஆர்மி பேக் கிரவுண்ட்'டை மையமாகக் கொண்டு கதை தயாரிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படம் போல் இருக்கும்,'' என்றார்.