சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

வேல்ஸ் பிலிம் தயாரிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன் நடித்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. நாயகியாக சித்தி இட்னானி நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு ரசிகர்களின் முன்னிலையில் பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நேற்று நடைபெற்றது.
விழாவில் பேசிய சிம்பு, ‛‛எனக்கு இந்த மாதிரி பிரமாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரமாண்டத்தை பார்த்ததும் நம் விழா தானா என சந்தேகம் வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது விண்ணை தாண்டி வருவாயா விழாவிற்கு வந்திருந்தார். அந்தப்படம் போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை அமெரிக்க டிரிப் கூட்டி போனதிற்கு முழு காரணம் அவர் தான். கவுதம் மேனனுடன் இது மூன்றாவது, படம் நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். ஏதாவது புதிதாக செய்வோம் இந்தப்படத்திலும் அது இருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்கள் தான் தருவார் அவருக்கு நன்றி. சித்தி இந்தப்படத்தில் அறிமுகமாகிறார் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. முதலில் ரு காதல் கதை செய்வதாகத்தான் இருந்தது. இந்தப்படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம் என்றேன் அப்போது தான் ஜெயமோகன் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன் படம் பற்றி நாம் பேசக்கூடாது, ரசிகர்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி'' என்றார்.




