விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாள நடிகர் திலீப் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு 3 மாத சிறை தண்டனையும் அனுபவித்தார். அதனால் அவர் மக்களின் செல்வாக்கை இழந்து விட்டார் என சொல்லப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் அவர் சிறையில் இருந்தபொழுதே, அவர் நடித்த ராம்லீலா என்கிற படம் வெளியானது.
அதுவரை திலீப் நடித்த படங்களை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்று, திலீப்பின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெருமையையும் பெற்றுத்தந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்கோபி என்பவர் இயக்கியிருந்தார். அதன்பிறகு மோகன்லாலின் மகன் பிரணவை வைத்து அருண்கோபி இயக்கிய 21ஆம் நூற்றாண்டு படம் சரியாகப் போகவில்லை. இந்த நிலையில் மீண்டும் அருண்கோபிக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் திலீப். இது திலீப் 147வது படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார் நடிகை தமன்னா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று(செப்., 1) நடைபெற்றது. இதில் தமன்னாவும், திலீப்புடன் சேர்ந்து கலந்து கொண்டார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, ஹிந்தியிலும் கூட படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவர் திரையுலகிற்கு வந்து இத்தனை வருட காலத்தில் இப்போது தான் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நேரம் வந்துள்ளது. புலிமுருகன் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்