'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லிப்ரா புரொடக் ஷன்ஸ் சார்பில் ‛சுட்டக்கதை, முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். யு-டியூப்பில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியை விமர்சித்தும் வருகின்றார். அதேப்போல் வீஜேவாக பணியாற்றி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று(செப்.,1) திருமணம் செய்துள்ளனர்.
திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
தனது திருமணம் குறித்து ரவீந்தர் சந்திரசேகரன் கூறுகையில், ‛‛மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாக கூறினார்.
மகாலட்சுமி ஏற்கனவே அனில் குமார் என்பவரை திருமணம் செய்து, பின்னர் அவரை விட்டு பிரிந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவர் உடன் பிரிவு, மற்றொரு சின்னத்திரை நடிகர் உடன் சர்ச்சையிலும் சிக்கினார் மகாலட்சுமி. அப்போது அந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ரவீந்தர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு படத்தில் மகாலட்சுமி நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.