வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' |

பிரபல பின்னணி பாடகர் பம்பா (49) பாக்யா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் பம்பா பாக்யா. ராவணன் படத்தில் தொடங்கியது அவரது திரைப்பயணம். ‛சர்கார்' படத்தில் இடம் பெற்ற ‛சிம்டாங்காரன்...' பாடல் அவரை இன்னும் பிரபலமாக்கியது. ‛2.0' படத்தில் இடம் பெற்ற ‛புல்லினங்காள்...' பாடலையும் இவர் தான் பாடியிருந்தார். ‛பிகில்' படத்தில் வரும் ‛காலமே காலமே...' போன்ற பாடல்களையும் பாடி உள்ளார். இம்மாதம் வெளியாக உள்ள ‛பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள ‛பொன்னி நதி' பாடலின் ஆரம்ப வரிகளையும் இவர் தான் பாடி உள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான 'ராட்டி' ஆல்பம் பாடல் இளைஞர்களை கவர்ந்தது. அதில் பம்பா பாக்யாவின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலின் வீடியோவை 1.74 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.
மறைந்த பம்பா பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.




