ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் பிரமாண்ட படமாக இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார் மணிரத்னம். முதல்பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே டீசர், இரண்டு பாடல்கள் வெளியானது. இப்போது செப்., 6ல் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இசை, டிரைலரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழா பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.




