பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக சிறந்த நடிப்பை அவர் வழங்கியதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வேளையில் இப்படி அவர் மருத்துவமனையில் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை மட்டுமல்ல அவரை மானசீக குருநாதராக வழிபடும் திரையுலகினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, இப்போதும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை ராதிகாவிற்கும் இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரான்சில் இருக்கும் ராதிகா அங்கே உள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ராதிகா, “என் இனிய டைரக்டர் பாரதிராஜா அவர்களே.. நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப என்னுடைய சிறப்பு பிரார்த்தனை.. உங்களிடம் பேசுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.