பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சூர்யா தயாரித்து, நடித்த படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இது போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இளைஞனின் நிஜகதை. இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தாலும் வழக்குகளும் விடாது துரத்துகிறது. ஒவ்வொரு வழக்கில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள், அதில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவரும் ஒருவர். அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற செப்டம்பர் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.