என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்த வந்த மீரா ஜாஸ்மின் 2014ம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோதும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியாக தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் மீரா ஜாஸ்மின். ஏற்கனவே சில போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அவர் தற்போது சில டாப் ஆங்கிள் புகைப்படங்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து, திருமணத்திற்கு முன்பு ஹோம்லியாக நடித்த மீரா ஜாஸ்மின் இப்போது கவர்ச்சி நடிகையாக உருவெடுக்க தயாராகி விட்டரோ ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி விடுகிறார்கள்.