விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சாதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ம் ஆண்டு துபாய் சென்றபோது ஓட்டல் ஒன்றில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இளைய மகள் குஷியும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவியின் 59வது பிறந்தநாள் ஆகும். அதையொட்டி ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. ஒவ்வொரு நாளும் உங்களை நாங்கள் மிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி சிறுவயதில் ஸ்ரீதேவியுடன் தான் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதையடுத்து ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட ஒரு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![]() |