''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சென்னை: ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிற்கு, நமது தாய் நாட்டிற்கு இது 75வது சுதந்திரம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும், சொல்லொணாப் போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும் அவமானங்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், இந்த சுதந்திரத்திற்காக தன்னலமின்றி உயிர் தியாகம் செய்த அத்தனை லட்சக்கணக்கான மக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகவும், நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், அந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், வீரமரணம் அடைந்தவர்கள், தலைவர்களை அவர்களைப் போற்றி பெருமை படுத்துவோம்.
ஜாதி, மதம் மற்றும் அரசியலை தாண்டி, நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி, அதன் பெருமையை நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு செல்வோம். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம். நாம் வணக்கம் செலுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்கட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி நேற்றே(ஆக.,12) தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.