'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பூரி ஜகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'லைகர்'. ஹிந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாக உள்ளது.
விஜய் தேவரகொன்டா நடிக்கும் முதல் நேரடி ஹிந்திப் படம் இது. படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு பாக்ஸராக நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனை இந்தியா முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா நடக்க உள்ளது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
இப்படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளத்திலும் இப்படம் வெளியாகிறது. விஜய்யின் முதல் பிரம்மாண்டமான பான் இந்தியா படம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டில் அவரும் ஒரு ஹீரோவாக வலம் வர வாய்ப்புகள் அதிகம்.