ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடிகை வினுஷா தேவி தற்போது சின்னத்திரையின் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். மேலும், விரைவில் வெளியாகவுள்ள 'என் - 4' என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிப்பதற்கு முன்பே மாடலாக வலம் வந்த வினுஷா தேவி பல போட்டோஷூட்களில் பங்கேற்று அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்காகவே அவரை பலரும் பாலோ செய்ய ஆரம்பித்தனர். தற்போதும் தனக்கான அடையாளத்தை கொடுத்த இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் வினுஷா, அண்மையில் மஞ்சள் நிற புடவையில் கேசுவலாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களில் வினுஷாவின் எதார்த்தமான கருப்பழகு பலரையும் கவர, ஏராளமான காதல் கீதங்கள் கமெண்ட் பாக்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.