மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சமூக ஊடகங்களில் கருத்து பேசி பிரபலமான சசி லயா தற்போது சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய தொடரான 'மீனாட்சி பொண்ணுங்க' என்ற தொடரில் ரெங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக லயா நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கான புரோமோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகை சசி லயா தனது ரெங்கநாயகி கெட்டப்பின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் போதே ரெங்கநாயகி கதாபாத்திரம் எவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. எனவே, சின்னத்திரையில் ஆரம்பத்திலேயே அதகளமாக அடியெடுத்து வைத்திருக்கும் லயாவிற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.