'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சமூக கருத்துகளையும், பாசிட்டிவான விஷயங்களையும் டிக்டாக் மூலம் பேசி வந்தவர் சசிலயா. தமிழை உச்சரிக்கும் இவரது ஸ்டைல் பலருக்கும் பிடித்துப்போகவே கொஞ்சம் கொஞ்சமாக மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக பிரபலமானார். தொடர்ந்து சில யூ-டியூப் சேனல்களிலும் நெறியாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பயில்வான் ரெங்கநாதனை புரட்டி எடுத்த இவரது பேட்டி பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், லயா தற்போது சீரியலிலும் நடிகையாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லயாவின் ரசிகர்கள் பலரும் படு குஷியாக உள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' என்ற புதிய தொடரில் சசிலயா ஹீரோவுக்கு அம்மாவாக ரெங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிக விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக அதிகம் பிரபலமாகியுள்ள லயா, சீரியலில் நடிகையாக அறிமுகமாகியுள்ள நிலையில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நேயர்களிடம் எழுந்துள்ளது.