'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் வீடியோ ஜாக்கியான ரக்ஷன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அவர் தற்போது சிங்கராக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் மா கா பா ஆனந்துக்கு அடுத்தப்படியாக வீஜே ரக்ஷன் தான் மிகவும் பிரபலமானவர். துல்கார் சல்மானுடன் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகி நடிப்பில் அசத்தியிருந்தார். தற்போது புதிய படம் ஒன்றிலும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வீஜே, நடிப்பை தவிர ரக்ஷன் தனது மற்ற தனித்திறமைகளையும் சமீபகாலங்களில் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்து தனது ரேசிங் திறமையை காண்பித்திருந்தார். இந்நிலையில், அவர் தற்போது 12பி படத்தின் பாடலை அழகாக பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். ரக்ஷனின் அடுத்தடுத்த அவதாரங்களை பார்க்கும் ரசிகர்கள் 'இத்தன நாள் இந்த திறமைய எங்க வச்சீருந்தீங்க ரக்ஷன்?' என பாராட்டி வருகின்றனர்.