போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழில் 2018ம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அதன்பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி, தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், தற்போது நட்டி நடராஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த காட்சியில் போதை பொருள் உட்கொள்வது, சிகரெட் பிடிப்பது போன்று தான் நடித்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு இந்த காட்சியில் தான் என்ஜாய் பண்ணி நடித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் போதை பொருள் பயன்படுத்துவது போன்று அவர் நடித்துள்ள இந்த காட்சி மற்றவர்களை போதை பழக்கத்துக்கு ஊக்குவிப்பது போல் உள்ளது என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்கு தங்களது எதிர்ப்பினை பதிவிட்டு வருகிறார்கள்.