நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் |
ஹிந்தியில் 1983ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை மையமாகக் கொண்ட கதையில் உருவான 83 என்ற படத்தில் கபில்தேவ் வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார். அதோடு தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்தபடியாக ஹிந்தியில் இயக்கும் அந்நியன் ரீமேக் படத்திலும் ரன்வீர் சிங்தான் நடிக்கப்போகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாண போட்டோ சூட் ஒன்று நடத்தி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் ரன்வீர். அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்ததோடு அவர் மீது மும்பை உள்ளிட்ட சில இடங்களில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதேசமயம் பாலிவுட் திரை உலகைச் சார்ந்த ஆலியாபட், ராக்கி சாவந்த் போன்ற பல நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தொடர்ந்து அவர் இதுபோன்று போட்டோ சூட் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இப்படியான நிலையில் தற்போது விலங்கு வதை தடுப்பதற்காக நடத்தப்பட்டு வரும் பீட்டாவும் தங்கள் அமைப்பின் விளம்பரத்திற்காக ரன்வீர் சிங்கை நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. ஏற்கனவே நிர்வாண போட்டோ சூட் நடத்தி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் ரன்வீர் சிங், பீட்டா அமைப்பின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வாரா? இல்லை மறுத்து விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.