ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
விலங்குகள் பாதுகாப்புக்காக உலக அளவில் செயல்பட்டு வரும் அமைப்பு பீட்டா. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியதால் பிரபலமானது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் பாதுகாப்பில் அக்கறையோடு ஈடுபடுகிறவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டின் சிறந்த விலங்குள் பாதுகாவலராக பாலிவுட் நடிகை அலியா பட்டை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குனர் சச்சின் பங்கேரா கூறியதாவது: ஆலியா பட் சைவ உணவை ஊக்குவித்து வருகிறார். அதோடு விலங்குகளிடம் கருணையும், அன்பையும் காட்ட அடுத்த தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். நாய், பூனை போன்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்பின் பிரசாரத்தில் பங்கேற்றார். மேலும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதற்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பீட்டா இந்தியா பேஷன் விருது வழங்கப்படுகிறது. என்றார்.
இதற்கு முன் இந்த விருதை நடிகர்கள் கபில் சர்மா, ஜான் ஆபிரகாம், நடிகைகள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் கபூர் , அஹுஜா ஆகியோர் பெற்றுள்ளனர்.