விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல | என் கேள்விக்கு இன்னும் எம்புரான் தயாரிப்பாளர் பதில் சொல்லவில்லை ; இயக்குனர் மேஜர் ரவி பதிலடி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவருக்கு மிகப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படம் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா'. அதன் பிறகு பாலா இயக்கத்தில் நடித்த 'பிதாமகன்' படமும் சூர்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.
சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா, சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பமாகவில்லை. பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையில் பிரச்சினை அதனால் படம் டிராப் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன. இதனிடையே, அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ஆர்வமாக இருப்பதாக சூர்யா பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
படத்திற்கு 'வணங்கான்' என்ற பெயரையும் அதன்பின் அறிவித்தார்கள். ஆனாலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. சூர்யா வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், 'வணங்கான்' படத்தை ஆரம்பிக்காமல் சிறுத்தை சிவா இயக்கும் படத்தை ஆரம்பிக்கலாம் என சூர்யா சொல்லிவிட்டாராம். இம்மாதக் கடைசியில் இப்படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
'வணங்கான்' படத்தின் திரைக்கதை வேலைகளை பாலா முழுமையாக முடிக்கவில்லையாம். அதை முடித்தபின் படப்பிடிப்பை ஆரம்பிப்போம் என பாலா, சூர்யா சேர்ந்து முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்.