ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். டாக்டருக்குப் படித்து முடித்துள்ள அதிதி, மருத்துவம் பார்க்காமல் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். அவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள 'விருமன்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. ஆடிப் பெருக்கு தினமான இன்று(ஆக.,3) அப்படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடைபெற உள்ளது.
ஆடிப்பெருக்கு தினத்தில் பலரும் புதிய படங்களை ஆரம்பிப்பதும், அறிவிப்பதுமாக உள்ளார்கள். அவ்வகையில் அதிதி ஷங்கரின் இரண்டாவது பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்க உள்ள 'மாவீரன்' படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கர் என அறிவித்துள்ளார்கள்.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டாம் பட அறிவிப்பைப் பெறும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் உள்ளார். இதற்கு முன்பு முதல் படம் வெளியாவதற்கு முன்பே இரண்டாம் பட வாய்ப்பைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். அவருடைய இரண்டாம் படமும் சிவகார்த்திகேயனுடன்தான் அமைந்தது. அவர் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். அது போலவே அதிதி ஷங்கருக்கும் அமைந்துள்ளது. அவரும் முன்னணி நடிகையாக வருவாரா என்பது 'விருமன்' பட வெளியீட்டிற்குப் பிறகே தெரியும்.




