ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், அவரது கணவர் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், 2020 டிசம்பர் 9ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்; பின், ஜாமினில் வந்தார்.மனைவி தற்கொலை வழக்கில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல் துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனுவுக்கு போலீசார் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், 'சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கக் கூடாது என, உடல், மன ரீதியாக ஹேம்நாத் சித்ரவதை செய்ததால், சித்ரா தற்கொலை செய்து கொண்டார். எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது' என, சித்ராவின் தந்தை காமராஜ் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இருவருக்கும் இடையே எவ்வித பிரச்னையும் கிடையாது. சித்ராவை தாக்கியதாகக் கூறுவது தவறு. 'அவரின் இறப்பில் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது; ஆனால், அதுகுறித்து எனக்கு முழுமையாக தெரியாது' என, வாதிட்டார்.
அப்போது, 'எந்த அடிப்படையில், அந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.'அவர்களுக்கு தொடர்பு இல்லையெனில், இந்த விவகாரத்தில் ஏன் ஹேம்நாத்தை இந்தளவுக்கு சிக்க வைக்க வேண்டும்? கணவர் என்பதால் கொலை குற்றச்சாட்டு சுமத்தக் கூடாது. தற்கொலை செய்த இடத்தில் என்ன நடந்தது என்று கூட அவருக்கு தெரியாது' என, ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டார்.