அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மலையாள திரை உலகின் நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பு வகித்து வருகிறார். விரைவில் நடிகர் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக மோகன்லால் இந்த விழாவில் ஒரு பாடலுக்கு நடனமாடி தனது பங்களிப்பை தர இருக்கிறார். இதற்காக தற்போது ரிகர்சலிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் நடனம் ஆடப்போவது சமீபத்தில் தெலுங்கில் நானி, நஸ்ரியா நடிப்பில் வெளியான அன்டே சுந்தரானிக்கி என்கிற படத்தில் இடம்பெற்ற தந்தானந்தா என்கிற பாட்டிற்குத்தான். இதற்காக நடிகைகள், ஸ்வேதா மேனன், அனன்யா, பிரியங்கா நாயர், லேனா, சுவாசிகா மற்றும் நடிகர்கள் பாபுராஜ், தினேஷ் பிரபாகர் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் மோகன்லால் ரிகர்சல் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.