மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா |

நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்கப் போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார் .
களரி பயிர்சிக்கலையில் குருவாக விளங்கும் மகேஷ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆனாலும் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திற்கு இசையமைத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..