ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான அபர்ணா பாலமுரளி, அந்த படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் முன்னணி நடிகையாகவும் உயர்ந்துள்ளார்... இந்த நிலையில் அவர் மலையாளத்தில் மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அந்த வகையில் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலியுடன் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஏற்கனவே ஆசிப் அலி நடித்த காக்சி அம்மணிப்பிள்ள என்கிற படத்தை இயக்கிய டிஞ்சித் என்பவர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். பொதுவாக மலையாள திரையுலகில் கதாசிரியர்களுடன் இணைந்து இயக்குனர்கள் பயணித்து வரும் நிலையில் காக்சி அம்மணிப்பிள்ள படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பகுல் ரமேஷ் என்பவர் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது ஆச்சர்யமான ஒன்று.