'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகரான பிரஜன் பல வருடங்களாக முயன்று பார்த்தும் சினிமாவில் பெரிய ப்ரேக்கை கொடுக்க முடியவில்லை. தற்போது சீரியலுக்கு பிரேக்கு கொடுத்துவிட்டு சினிமாவில் முழுமூச்சாக இறங்கி முயன்று வருகிறார். அந்த வகையில் பிரஜன் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'டி3'. இருவருமே சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு நடிக்க சென்றவர்கள் என்பதால் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் வெளிவரவுள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டி3' படத்தின் பர்ஸ்ட் லுக்கை போஸ்டரை வெளியிட உள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு தற்போது அதிகமான பாலோவர்கள் இருப்பதால் அவர் வெளியிட்டால் கண்டிப்பாக நல்ல ரீச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'டி3' படத்தின் போஸ்டர் லுக்கை இன்று ஜூலை 28 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். இந்த தகவலை பகிர்ந்துள்ள பிரஜன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவிடுள்ளார்.