பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சின்னத்திரை நடிகையான ஆனந்தி தனது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பென்சில் ஆர்ட் முறையில் ஆனந்தி வரையும் ஓவியங்களை அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதில், சிலவற்றில் ரொமாண்ஸ் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து சக நடிகைகளும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போல் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ள ஆனந்தி, கேப்ஷனில் 'மழை வந்தாலே ரொமாண்ஸ் மூட் வந்துவிடுகிறது' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரபல சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், 'ஆஹான்... ஆர்யாவுக்கு தம்பி பாப்பா வா' என கேட்டு பதிவிட்டுள்ளார். அதை ஆமோதிப்பது போல் நடிகை நக்ஷத்திராவும் கமெண்ட் அடித்து ஆனந்தியை கலாய்த்துள்ளார்.




