தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகிறது. இதில் தேஜஸ்வனி கவுடா, நிஹாரிகா ஹர்ஷூ, புவியரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மேலும் சுவராசியத்தை கூட்டும் வகையில் நீதிமன்றம் எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் நீதிபதி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் நீதிமன்ற காட்சிகள் என்றாலே மிகவும் காமெடியாகவும், அதேசமயம் புத்திசாலித்தனமான வாதங்களும் இருக்கும். தற்போது அவரே நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சீரியலின் டிஆர்பியிலும் பாக்யராஜ் என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.