அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பாலக்காடு : ''திரைப்பட பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என, விருது பெற்ற நஞ்சியம்மா பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனர் சாச்சிக்கும், சிறந்த துணை நடிகராக, அதில் நடித்த பிஜூ மேனனுக்கும், பின்னணி பாடகி விருது நஞ்சியம்மாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், அப்படத்தில் பாடிய 'கலக்காத்த சந்தனமேரி வெகுவூக பூத்திருக்கு' என்ற பாடல் மிகப்பிரபலம். இதுகுறித்து, நஞ்சியம்மா கூறுகையில், ''என் மனதை தொட்ட பாடல் இது. இதை நானே எழுதி பாடினேன். இசை ரசிகர்கள் எல்லோர் மனதிலும் இப்பாடல் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என்றார்.