Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லாம் இருக்கு ஆனால் நிம்மதி இல்லை - ரஜினிகாந்த் வருத்தம்

23 ஜூலை, 2022 - 12:16 IST
எழுத்தின் அளவு:
I-have-everything-but-there-is-no-relief-and-happiness-says-Rajinikanth

சென்னை : சென்னையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‛‛பணம், பேர், புகழ் என என் வாழ்வில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை'' என்றார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார்.

அதன்பின்னர் இந்த விழாவில் அவர் பேசியதாவது : யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. என்னை பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். ஆனால் இது பாராட்டா, திட்டா என தெரியவில்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ‛‛ராகவேந்திரா, பாபா'' படங்கள் மட்டும் தான். இந்த படங்கள் வந்த பின்னர் அவர்களை பற்றி மக்கள் நிறைய தெரிந்து கொண்டனர். நிறைய பேர் இமயமலைக்கு சென்று வந்தார்கள். என் ரசிகர்கள் சிலர் சன்னியாசியாக மாறி உள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக உள்ளேன்.இமயமலையில் இயற்கையாகவே அமைந்த சொர்க்கம். இங்குள்ள சில மூலிகைகளை சாப்பிட்டால் ஒருவாரத்திற்கு புத்துணர்ச்சி இருக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். உடல் ஆரோக்கியம் முக்கியமானது. இல்லையென்றால் மருத்துவமனை செல்ல வேண்டும். நான் இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தேன்.அதேப்போன்று அறிவையும் வளர்க்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். நற்சிந்தனைக்கு புத்தகங்கள் வாசிக்க வேண்டும். வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்வில் பணம், பேர், புகழ், பெரிய பெரிய அரசியல்வாதிகள் என எல்லாவற்றையும் கடந்து எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, மகிழ்ச்சியில் 10 சதவீதம் கூட எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது : தேசிய விருது குறித்து சூர்யா மகிழ்ச்சிநல்ல படங்களில் தொடர்ந்து ... சிறந்த பின்னணி பாடகி விருது : பெருமிதம் தெரிவித்த நஞ்சியம்மா சிறந்த பின்னணி பாடகி விருது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Tamil - Trichy,இந்தியா
24 ஜூலை, 2022 - 12:05 Report Abuse
Tamil நீங்கள் அதிகமாக பணம் வைதுரூகிறீர்கள். அதில் வொரு பகுதியை உங்கள் சினிமா துறையில் எத்தனயையோ கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் கலைகர்களுக்கு பகிர்ந்து கொடுத்து பாருங்கள். நிச்சயம் நிம்மதி உங்களை தேடி வரும்.
Rate this:
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
24 ஜூலை, 2022 - 11:09 Report Abuse
Ranjith Rajan இந்த வருடம் முழுவதும் உடல் நலத்தையும், மன நலத்தையும் பராமரிக்கவும். இந்த வருடம் உங்களுக்கு கண்டம் உள்ளதாக பல முன்னணி ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
Rate this:
nizamudin - trichy,இந்தியா
24 ஜூலை, 2022 - 10:48 Report Abuse
nizamudin யாருய்யா நீ எங்கள் சூப்பர் ஸ்டாரை வா போ சொல்ல
Rate this:
nizamudin - trichy,இந்தியா
24 ஜூலை, 2022 - 09:10 Report Abuse
nizamudin அந்த நிம்மதி கூட இங்கு யாரிடமும் இல்லை/பணம் புகழ் செல்வாக்கு அது கூட எங்களிடம் இல்லை/நிலங்கள் வீடுகள் விற்று ஒன்றும் இல்லாத நிலையில் வாழ்கிறோம்
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
23 ஜூலை, 2022 - 18:12 Report Abuse
தமிழன் எப்படி வரும் நிம்மதி??? பெரிய ஞானியைப் போல் படத்தில் வசனம் மட்டும் பேசினால் நிம்மதி தானாக வீட்டைத் தேடி வருமா??? ஊருக்கு ஒரு உபதேசம் தனக்கு வேறொரு உபதேசம்... இவ்வளவு வயசாகியும் கோடிகள் சேர்த்தும் இன்னும் பணத்திற்கு பின்னால் ஓடினால் அந்த கடவுள் என்ன, மந்திரம் போட்டு நிம்மதியை கொடுப்பாரா??? பெருசு இப்போதான் பொழம்ப ஆரம்பிச்சிருக்கு...வயசான காலத்தில் குடும்பத்தை கவனிக்காமல் பணத்தின் பின்னால் இன்னும் சாகும் வரை ஓடிகிட்டே இருந்தால் என்ன செய்ய??? இவ்வளவு கோடிகள் சேர்த்தும் இன்னும் பணத்திற்கு பின்னால் ஓடும் உனக்கே இன்னும் பேராசை அடங்கல...சாதரன மனிதன் பணத்தின் பின்னால் ஓட மாட்டானா??? மொதல்ல நீ ஊருக்கு உபதேசம் செய்யறத நிறுத்து. உனக்கு அந்த தகுதியெல்லாம் கிடையவே கிடையாது... மொதல்ல உனக்கு பின்னால் இருக்கும் கரையை தொட...அப்புறம் அடுத்தவனுக்கு உபதேசம் பண்ணலாம்....
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
24 ஜூலை, 2022 - 10:12Report Abuse
RaajaRaja Cholanஅண்ணன் ரொம்ப சந்தோஷமா இருக்காப்புல, அடுத்தவன் கோடிகள் சேர்த்தால் கதறுவது சில்லறை தனம், அவன் சேர்த்தால் அந்த ஆள் நடித்ததை மக்கள் மூன்று மணி நேரம் ரசிக்க மட்டுமே, உன் அப்பன் வீட்டு காசா, உன்னிடம் அந்த ஆள் கெஞ்சினாரா காசு கொடு என்று, அவன் விருப்பம் அவன் ஓட, நீ காசுக்கு பின்னால் ஓட வில்லையா, அப்படின்னா உனக்கு ஒரே மகிழ்ச்சி மட்டும் தானே வாழ்க்கையில் இருக்கும், நீ அடுத்தவனுக்கு யோக்கியன் மாதிரி பேசுவதை நிறுத்து, என்னவோ அந்த ஆளு மட்டும் தான் காசுக்கு பின்னாடி ஓடுனது மாதிரியும் இவனுங்க எல்லாம் யோக்கியம் மாதிரியும், ஹானசூனியன்கள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in