175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
தமிழ்த் திரையுலகத்தில் 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அவர் அறிமுகமாகி சில ஹிட் படங்களில் நடித்தாலும் அவரெல்லாம் ஒரு ஹீரோவா என கிண்டலடித்தவர்கள் உண்டு. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் சிறந்த படங்களில், சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றார் தனுஷ். அவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது, படம் இயக்குவது என தனது மற்ற திரையுலகத் திறமைகளையும் இந்த உலகத்திற்குக் காட்டினார். தமிழில் மட்டும் நடிக்காமல் ஹிந்தி, பிரெஞ்ச் எனச் சென்றவர் தற்போது 'அவஞ்சர்ஸ்' புகழ் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டார்.
தனுஷை ஒரு குளோபல் ஸ்டார் எனப் பாராட்டியுள்ளார் முன்னணி நடிகையான சமந்தா. அவர் கலந்து கொண்ட 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுமாறு கேட்டதற்குத்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார்.